தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. வடக்கு மாவட்டத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

Update: 2022-10-15 22:14 GMT


இந்தி திணிப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. வடக்கு மாவட்டத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பையும், ஒரே நுழைவுத்தேர்வையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் இளைஞரணி, மாணவர் அணி சார்பில் நேற்றுகாலை திருப்பூர் ரெயில் நிலையம் முன் உள்ள பெரியார், அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்தி திணிப்பை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தி திணிப்புக்கு எதிராக தலைவர் கருணாநிதி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது மீண்டும் மத்திய அரசு இந்தி திணிப்பை கொண்டு வந்துள்ளது. எப்பாடுபட்டாவது தமிழகத்தில் இது தடுத்து நிறுத்தப்படும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தின் நிலையை மற்ற மாநிலங்கள் எதிர்பார்த்துள்ளன. இளைஞர் அணி, மாணவர் அணியினர் ஒருங்கிணைந்து இதுபோன்ற போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இந்தி திணிப்பை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தி திணிப்புக்கு எதிராக பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். மாநகராட்சி மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், பிரேமலதா கோட்டாபாலு,திவாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்.எஸ்.ஆர்.ராஜ்,சிராஜூதீன், வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி, மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் வடுகநாதன், பகுதி செயலாளர்கள் ராமதாஸ்,உசேன்,அய்யப்பன் சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜான் வல்தாரீஸ், இளைஞரணி மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் தேவராஜ், சிவபாலன், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், ெதா.மு.ச. கவுன்சில் செயலாளர் ஜீவாசிதம்பரசாமி, மின்வாரிய சங்க நிர்வாகி சரவணன், நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, திலகராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்