தே.மு.தி.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
கோவில்பட்டியில் தே.மு.தி.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்து திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழம், நீர் மோர் வழங்கினார். நிகழ்ச்சியில் நகரசெயலாளர் பால முருகன், மாவட்ட அவைதலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுகுழு உறுப்பினர் எல்லப்பன் ரெங்கசாமி, கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், விளாத்திகுளம் ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.