தே.மு.தி.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து

Update: 2023-09-09 18:27 GMT

வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே தே.மு.தி.க. சார்பில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். சாலை ஓரத்தில் கைகளை கோர்த்து நின்று சுங்க கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது சுங்க கட்டணத்தை உயர்த்துவதை மத்திய அரசு கைவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்