தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-06-05 18:29 GMT

கரூர்,

கரூர் மத்திய மாநகர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அரவை முத்து தலைமை தாங்கினார். அவைத்தலைவர் முருகன் சுப்பையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விஜயகாந்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது, பிரேமலதா விஜயகாந்துக்கு செயல் தலைவர் பதவி வழங்க வலியுறுத்துவது, உட்கட்சி தேர்தலை யொட்டி அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொருளாளர் கலையரசன், மாவட்ட துணைச் செயலாளர் அனிதா ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்