பெரியார் சிலைக்கு தி.க.-தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தி.க.- \தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-09-17 18:45 GMT

பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தி.க.- தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் பிறந்த நாள்

திருவாரூரில் பெரியாரின் பிறந்த நாளையொட்டி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே ரவுண்டானாவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தி.க. மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் கருணாநிதி, நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், தி.க. மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி, நிர்வாகி சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பும், திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்திலும் பெரியார் உருவ படத்திற்கு பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் பெரியார் பிறந்த நாள் விழா அனைத்து கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தி.க. மாவட்ட செயலாளர் ராயபுரம் கணேசன், மாநிலபொதுக்குழு உறுப்பினர் சிவஞானம், தி.மு.க.வை சேர்ந்த நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆதிஜனகர், நகர செயலாளர்ஷாஜகான், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் நீலன்.அசோகன், வட்டார தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்