கோபியில் இன்று திராவிட மாடல் பிரசார பயணம்- கீ.வீரமணி பங்கேற்பு

கோபியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் திராவிட மாடல் பிரசார பயணத்தில் கீ.வீரமணி பங்கேற்கிறார்.

Update: 2023-02-03 21:47 GMT

கோபி

கோபியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் திராவிட மாடல் பிரசார பயணத்தில் கீ.வீரமணி பங்கேற்கிறார்.

பிரசார பயணம்

சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பிரசார பயணம் ஈரோடு, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் தி.க. சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணி அளவில் பிரசார கூட்டம் கோபி ஜியோன் தியேட்டர் அருகில் நடக்கிறது.

இதில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி கலந்துகொண்டு பேசுகிறார். சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற கோரியும், பொருளாதார அளவுகோலில் இட ஒதுக்கீடு வழங்குவதை தடுக்க கோரியும், சமூக நீதி கொள்கைகளை விளக்கியும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வலியுறுத்தியும் அவர் பேசுகிறார்.

ஏற்பாடுகள்

மாவட்ட தி.க. தலைவர் நா.சிவலிங்கம் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர் வக்கீல் மு.சென்னியப்பன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட தி.மு.க. செயலாளர் என் நல்லசிவம், கோபி நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், மாநில தி.மு.க. அமைப்பு செயலாளர் த.சண்முகம், மாவட்ட காப்பாளர் ரா.சீனிவாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சீனு, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தி.க. தலைமை கழக பேச்சாளர் அதிரடி க.அன்பழகன் தொடக்க உரையாற்றுகிறார். தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தி.க. மாவட்ட பொது செயலாளர் ரா.ஜெயக்குமார், தி.க. மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு ரா.குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தி.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்