மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி ஜவுளி

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி ஜவுளி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2022-10-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி சிதம்பர நாடார்- காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் கண்தான இயக்கம் சார்பில் பார்வை குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் 120 பேருக்கு தீபாவளி புத்தாடைகள், அரிசி, பலசரக்கு, இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கண்தான இயக்கத் துணை தலைவர் என்.ராஜவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னை கேசவன், மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், என்ஜினீயர் செந்தில்குமார், ரீஜென்ட் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் ஹரி பாலகன், தீப்பெட்டி அதிபர் திலகரத்தினம், நகைக்கடை அதிபர் வி.எஸ்.பாபு ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். கண்தான இயக்க துணை தலைவர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்