தீபாவளி பண்டிகை: நெல்லையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2022-10-16 17:19 GMT

நெல்லை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நெல்லையில் இருந்து பீகார் மாநிலம் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை-தானாப்பூர் சிறப்பு ரெயில் (06190) வருகிற 18-ந்தேதி மற்றும் 25-ந்தேதி ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் மதுரை, பழனி, கோயம்புத்தூர், சேலம் வழியாக சென்று வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு தானப்பூர் சென்றடையும்.

இந்த ரெயில் மறுமார்க்கத்தில் தானாப்பூர்-நெல்லை சிறப்பு ரெயில் (06189) வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக 24-ந்தேதி அதிகாலை 4.20 மணிக்கு நெல்லை வந்தடையும்.

இந்த சிறப்பு ரெயிலானது கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கல்கலூர், பீமாவரம் நகர், தனுகு, நீடாவாலு, மொகமெக், பக்தியார்பூர், பாட்னா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்