தீபாவளி பண்டிகை: மதுரை மல்லிகை கிலோ ரூ.1500 வரை விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1500 வரை விற்பனையானது.

Update: 2022-10-23 17:14 GMT


தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1500 வரை விற்பனையானது.

பூ மார்க்கெட்

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. பண்டிகை என்றால் பூக்கள் இல்லாமல் இருக்காது. அதிலும், மதுரை மல்லிகைப்பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அதன் காரணமாகவே, இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மல்லிகைப்பூ ஏற்றுமதியாகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்வாக இருந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1500 வரை விற்பனையானது. அதே நேரத்தில் நேற்று மாலை நேரத்தில் மதுரை மல்லிகைப்பூவானது ஒரு கிலோ ரூ.1000 விற்பனையானது. இதுபோல், முல்லை ரூ.1200, பிச்சி ரூ.1000, கனகாம்பரம் ரூ.1500, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.150, பட்டன்ரோஸ் ரூ.150, தாமரை ரூ.10 என விற்பனையானது.

மக்கள் கூட்டம்

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து பூவியாபாரிகள் கூறுகையில், "கடந்த வாரத்திலும் மல்லிகைப்பூவின் விலை இதே விலையில் தான் இருந்தது. கடந்த ஆண்டை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிக பூக்கள் விற்பனையானது. ஆனால் வியாபாரிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்