தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-02 00:53 GMT

சென்னை,

வங்கக்கடலில் நாளை உருவாகும் மிக்ஜம் புயல், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வந்து, 5-ந்தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, தேனி, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்