உடன்குடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டம்

உடன்குடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-17 15:40 GMT

உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மற்றும் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடியில் நடந்தது. திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் தனிஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் இசை சங்கர், மாநகர் மாவட்ட தலைவர் திலகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வுமான ஊர்வசி அமிர்தராஜ், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின்பிரசாத், அகில இந்திய செயலாளர் வைசாக், மாநில பொதுச்செயலாளர் அஸ்வத்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்கும் ராகுல் காந்தி நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், நகர தலைவர் முத்து, பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெபஸ் பிளாஸ்வின் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்