மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு
காட்பாடி பகுதியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
காட்பாடி பகுதியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வேலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இந்தப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். 1-வது மண்டலத்தில் உள்ள காந்திநகர், வி.ஜி.ராவ்நகர், சி.செக்டார் உள்பட பல இடங்களில் நடந்து வரும் குப்பைகள் தரம்பிரிப்பு மையங்கள், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு கூடங்களில் நடக்கும் குப்பை தரம் பிரிப்பு, உரமாக்கும் விதம் குறித்து ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் குப்பைகள் தரம்பிரிப்பு மையங்களில் உருவாக்கப்படும் உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை பயிரிட வேண்டும். இதன் மூலமாக இங்கு தயாராகும் உரங்கள் விளைநிலங்களுக்கு ஏற்றது என்ற எண்ணம் மக்களிடையே வரவேண்டும். அப்போதுதான் தாமாக முன்வந்து உரங்களை ஆர்வத்துடன் வாங்குவர்கள்.
பூங்கா தாவரம்
எனவே உரக்கூடங்களுக்கு அருகே பூங்காக்கள், தாவரங்களை அதிகம் ஏற்படுத்த வேண்டும். இப்பணிகளை சிறப்பாக நடத்த மாநகராட்சி ஊழியர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள் சிரத்தையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகர் அலுவலர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.