சங்கராபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு

சங்கராபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-09-15 18:45 GMT


சங்கராபுரம், 

சங்கராபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும், அரசு மாணவ-மாணவியர் விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளுக்கும் உரிய காலத்தில், உரிய அளவில் செல்கின்றதா? என்பதையும், கிடங்கில் பதிவேடுகள் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது. சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், கிடங்கு உதவி தர கட்டுப்பாட்டு அலுவலர் பிரபாகரன், தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம், பொது வினியோக திட்ட நகர்வு உதவியாளர் ஆழ்வார் மற்றும் கிடங்கு பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்