வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
காட்பாடி தாலுகாவில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
காட்பாடி
காட்பாடி தாலுகாவில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஜமாபந்தி கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை ேவண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில் வீட்டுமனைபட்டா வழங்குவது தொடர்பான மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேற்று காட்பாடி தாலுகாவுக்கு வந்தார். அவர் சேனூர், கரசமங்கலம், ஏரந்தாங்கல் உள்பட பல கிராமங்களில் ஆய்வு செய்தார்.
இருளர், நரிகுறவர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின்போது காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல துணைத் தாசில்தார் சாதிக், வருவாய் ஆய்வாளர் தீனதயாளன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.