இலுப்பூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு
இலுப்பூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
இலுப்பூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரணஜெயஆனந்த் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வழக்கு தொடர்பான ஆலோசனைகளை வழங்கிய அவர் நீதிமன்ற வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் இலுப்பூர் நீதிமன்ற நீதிபதி அன்புதாசன், இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி, இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், ஹேமலதா, கதிரவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.