திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சி குழு சிறப்பு கூட்டம்
திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சி குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் சிறப்பு குழு கூட்டம் தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் அறவாழி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், இல.சரவணன், கே.சாந்தி கண்ணன், கே.ஆர்.தங்கமணி, எஸ்.முத்து, என்.சுஜாதா, இ.கஸ்தூரி, கே.அருணா உள்பட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவண்ணாமலை நகரில் வருகிற 6-ந் தேதி நடைபெறவுள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆகியோரின் முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தும், விழா சிறப்பாக நடைபெற மாவட்ட ஊராட்சி மூலம் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ப.பரிமேலழகன் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி பணிநிறைவையொட்டி அவருக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணித்து கவுரவித்தனர்.