மாவட்ட எம்.ஜி.ஆர். கழக கூட்டம்
ஆம்பூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். கழக கூட்டம் நடைபெற்றது.
ஆம்பூர் அடுத்த பூந்தோட்ட பகுதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். கழக கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செய்தி தொடர்பாளர் ஆம்பூர் சிவகுமார் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சதாசிவம், வேலூர் மாநகர செயலாளர் கண்ணன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பன்னீர் தாஸ் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் ஆம்பூர் காவல் நிலையத்திற்கு நிரந்தரமான இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும், காட்டன் சூதாட்டம், லாட்டரி விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இளைஞர் அணி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.