மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2022-09-20 10:56 GMT

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட சமூக நலன், மனித உரிமைகள் நலத்துறை மற்றும் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும்பள்ளி, தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இதில் மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தது. மேலும் குழு விளையாட்டாக கைப்பந்து, கூடைப்பந்து, ஆக்கி ஆகிய போட்டிகளும் நடைபெற்றது.

400 மாணவிகள் பங்கேற்பு

போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு நான்சி தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் முன்னிலை வகித்தார்.

மாணவிகளுக்கான விளையாட்டு போட்டியை சமூக நலத்துறை அலுவலர் மீனாம்பிகை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்