வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.