மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.

Update: 2023-01-08 20:55 GMT

திருச்சி மாவட்ட அளவிலான செஸ் போட்டி பாரதியார் சாலையில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 7, 9, 10, 11, 13, 15 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளிலும், ஓப்பன் முறையிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.7 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் 105 கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்