மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம்

மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-26 18:12 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இதில் 4 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பயனாளிகள் அளிக்கின்ற விண்ணப்பங்களை நிராகரிக்காமல் அவர்களுக்கு விரைவாக கடன்உதவி தருவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கப்படுகின்ற மனுக்கள் மீது உடனடியாக வங்கி கடன் வழங்குவதற்கான உகந்த சூழலை உருவாக்கி கடனுதவிகளை தருவதற்கு முன் வர வேண்டும். கல்விக்கடன் கேட்டு வரும் மாணவ, மாணவிகளுக்கு முனைப்புடன் செயல்பட்டு கல்வி கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை தவிர்த்து விடாமல் கடன் உதவி வழங்க வேண்டும்.

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படும் அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் வரும் விண்ணப்பங்களை விரைந்து முடித்து பயனாளிகள் பயன் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களையும் நிராகரிக்க கூடாது என வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்