மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி

கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-14 18:45 GMT

அண்ணா சைக்கிள் போட்டி

கடலூரில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, சைக்கிள் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா முன்னிலை வகித்தார். இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய போட்டியானது, குண்டுசாலை வழியாக குமராபுரம் வரை சென்று வந்தது.

இந்த போட்டியானது 13 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி பிரிவாக நடத்தப்பட்டது. அதாவது மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவி களுக்கு 10 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட்டது. இதேபோல் 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் என சைக்கிள் போட்டி நடைபெற்றது.

விரைவில் சான்றிதழ்

மேலும் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரம் போட்டியும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம் என போட்டி நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்