மாவட்ட அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஆக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்கள் நடந்தது. திருச்சி ஆக்கி அகாடமி சார்பில் நடந்த இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 10 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. இதன் இறுதி போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் காஜாமியான்- டி-ஆலை பள்ளி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் முடிவில் காஜாமியான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 3-வது இடத்தை ஆர்.சி.பள்ளியும், 4-வது இடத்தை திருச்சி ஆக்கி அகாடமி அணியும் பெற்றன.