தேவபாண்டலத்தில் நிலஅளவை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தேவபாண்டலத்தில் நிலஅளவை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-21 18:45 GMT


சங்கராபுரம், 

சங்கராபும் அருகே உள்ள தேவபாண்டலம் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் துணை தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. கோட்ட செயலாளர் நடராஜ், பொருளாளர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் பிரபாகர், பொருளாளர் சக்திவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட தலைவர் ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளர் குபேரன், மாநில துணைத்தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், ரவி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் மோகன்ராஜ், ரஜினிகாந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொடுத்த உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட இணை செயலாளர் இந்திரகுமார், திருக்கோவிலூர் கோட்டதலைவர் ராம்பிரகாஷ், பொருளாளர் முகமதுஷெரீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்