மாவட்ட கால்பந்து போட்டி

புன்னக்காயலில் மாவட்ட கால்பந்து போட்டி நடந்தது.

Update: 2022-06-14 15:30 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் புனித ஜோசப் கால்பந்தாட்ட கழகத்தின் சார்பில் மனுவேல் ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற் கோப்பைக்கான 49-வது ஆண்டு மாவட்ட கால்பந்தாட்ட போட்டி கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் மர்காஷிஸ், வீரபாண்டியன் பட்டினம், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி, காயல ஸ்போட்ஸ் கிளப் காயல்பட்டினம், கால்பந்து அணி மற்றும் தூத்துக்குடி பிரண்ட்ஸ் புட்பால் கிளப், சவுத் கோஸ்ட் புட்பால் கிளப், சாகுபுரம் டி.சி.டபிள்.யு. அணி போன்ற 12 அணிகள் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும், தூத்துக்குடி செல்வம் சர்க்கஸ் அணியும் மோதின. இதில் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால் இரு அணிகளும் கோல் போட முடியவில்லை.

இதனால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் காயல்பட்டினம் அணி கோப்பையை தட்டிச் சென்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கால்பந்து கழக தலைவர் ஜெ. யூஜின் ரொட்ரிகோ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் பெர்னாண்டோ ஆசியுரை வழங்கினார். புனித ஜோசப் கால்பந்தாட்ட அணி செயலாளர் ஜோசப் வரவேற்றுப் பேசினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற் கோப்பைகளை தமிழ்ச்செல்வி வழங்கினார். புனித வளனார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சகாயராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்