வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை 1,196 பேர் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை 1,196 பேர் எழுதினர். இத்தேர்வை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-09-10 18:45 GMT

வட்டார கல்வி அலுவலர் தேர்வு

தமிழகம் முழுவதும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டி தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி என, 4 மையங்களில் நடந்தது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 1,409 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் 213 பேர் தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 1,196 பேர் மட்டுமே தேர்வை எழுதினர்.

கலெக்டர் பார்வையிட்டார்

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்