மாவட்ட ஓட்டுனர் நல சங்க அலுவலகம் திறப்பு

மாவட்ட ஓட்டுனர் நல சங்க அலுவலகம் திறக்கப்பட்டது.

Update: 2022-06-06 18:41 GMT

உடையார்பாளையம் 

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுனர் நல சங்க மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அரியலூர் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுரேஷ், கவுரவ தலைவர் மூர்த்தி, உடையார்பாளையம் நகர தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாவட்ட அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பேசினார். இதில் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுனர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடையார்பாளையம் செயற்குழு உறுப்பினர் செந்தமிழன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்