தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு
வந்தவாசியில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியில் மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில் 5-வது மாவட்ட மாநாடு மற்றும் பொது பேரவை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் அருணாச்சலம் தொடக்கவுரை ஆற்றினார். பொதுச் செயலாளர் உதயகுமார் வரவேற்றார். அகில இந்திய தலைவர் மாநில பொது செயலாளர் வீரப்பன் சிறப்புரையாற்றினார்.
அப்போது, கணினி ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். இ.பி.எப். மற்றும் எம்.சி.எம். தனிநபர் காப்பீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆள் பற்றாக்குறை மற்றும் காலி பணியிடங்களுக்கு ஊழியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். நெல்பயிர் கடனின் தவணை காலம் ஓராண்டாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
முன்னதாக சங்க கொடி ஏற்றி, மறைந்த சங்கத்தின் முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
மாநாட்டில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் தலைவர் கோதண்டன், துணைத் தலைவர் ஜி.முனுசாமி, ஆறுமுகம், ராமர், பொருளாளர் சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் யுவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் மழையூர் ப.வெங்கடேசன் உள்படப லர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் மாசிலாமணி நன்றி கூறினார்.