திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஸ்கேன் பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகியவற்றை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அனைத்து இடங்களையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உரிய படுக்கை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை குறைவின்றி வழங்க வேண்டும் என்று அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.