விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் வினியோகம்

திருமருகல் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் வினியோகம் செய்யப்பட்டது

Update: 2023-08-03 18:45 GMT

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் ஆடி பட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி சாகுபடி செய்வதற்காக காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குனர் பரிமேலழகன், தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர் விவசாயிகளுக்கு காய்கறி விதைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கீழப்புதனூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, தோட்டக்கலை அலுவலர் ஸ்ரீவித்யா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்