ஸ்ரீவைகுண்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்

ஸ்ரீவைகுண்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2022-07-25 15:43 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊர்வசி அமிர்தராஜ், எம்.எல்.ஏ. தலைமைதாங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் நல்லகண்ணு, பேரூராட்சி நிர்வாக அதிகாரி மைதீன் காதர், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் சங்கர், தமிழ்நாடு பனை வாரிய உறுப்பினர் எடிசன், பொதுச் செயலாளர்கள் அலங்காரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கால்நடை மருத்துவமனையில் விவசாயிகளுக்கு கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் மாணிக்கவல்லி வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. விவசாயிகளுக்கு கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவி, சாயர்புரம் நகர பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்