மாடித்தோட்டத்துக்கு தேவையான பொருட்கள் வினியோகம்

திருத்துறைப்பூண்டியில் மாடித்தோட்டத்துக்கு தேவையான பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று ேதாட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கூறினார்.

Update: 2023-09-12 19:00 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மாடித்தோட்ட தளை(தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள்) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் மாடி தோட்டத்தளை 50 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த மாடி தோட்ட தளையில் 6 வளர்ப்பு பை, 6 தென்னை நாற்கழிவு கட்டிகள், வேப்ப எண்ணெய் 100 மில்லி, 6 வகையான விதைத்தளைகள், அசோஸ்பைரில்லம் 300 கிராம், பாஸ்போ பாக்டீரியா 300 கிராம் மற்றும் டிரைகோடர்மா விரிடி 200 கிராம் ஆகிய பொருட்கள் இருக்கும். இதன் மொத்த விலை ரூ. 900. இதில் மானியம் ரூபாய் 450 போக ரூ. 450 மற்றும் ஒரு ஆதார் நகல் செலுத்தி மாடி தோட்ட தளையை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்