வீடு, வீடாக தேசியக்கொடி வினியோகம்

திருப்பத்தூர் நகர பா.ஜ.க. சார்பில் வீடு, வீடாக தேசியக்கொடி வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-08-14 17:24 GMT

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் நகர பா.ஜ.க. சார்பில் 16-வது வார்டு பகுதிகளில் உள்ள கங்காதரன் தெரு, சீனிவாசன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் எம்.தீபா சார்பில், அவரது சொந்த செலவில் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர்கள் வக்கீல் அன்பழகன், ஈஸ்வர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கண்ணன், வழக்கறிஞர் பிரிவு மேகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, பட்டியல் அணி துணைத் தலைவர் ஆர்.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்