கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்

சின்னமனூர் நகராட்சி 14-வது வார்டு டிரஸ்டி ராமசாமி தெருவில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து பழுப்பு நிறத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.

Update: 2023-05-03 19:30 GMT

சின்னமனூர் நகராட்சி 14-வது வார்டு டிரஸ்டி ராமசாமி தெருவில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து பழுப்பு நிறத்தில் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் அந்த குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் கூறியும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த குடிநீரால் அப்பகுதி மக்களுக்கு தோலில் அரிப்பு ஏற்படுகிறது. இவையில்லாமல் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீரை சுத்திரிகரித்து வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்