குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-04-09 19:00 GMT

கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று மணிக்கூண்டு அருகில் பொதுமக்களிடம் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர். அப்போது, வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பான பூட்டு போட்டு பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கோடைக்காலம் என்பதால் வீடு, ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டாம். சந்தேகப்படும்படியாக தங்கள் பகுதியில் யாராவது நடமாடினால், இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு, கடை, அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் மிகவும் பாதுகாப்பானது. வங்கிகளில் பணம் எடுக்க செல்லும் போது, ஏ.டி.எம். கார்டுகளை அறிமுகம் இல்லாத நபர்களிடம் வழங்க வேண்டாம் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்