போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
சீர்காழியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்திரவின்படி சீர்காழி பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த வாரம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் சீர்காழி போலீசார், வர்தத்கர்கள் பாதுகாப்பு நல சங்கம் இணைந்து போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சீர்காழி கொள்ளிடம் முக்குட்டு சாலை, ெரயில்வே ரோடு, பழைய, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகிளல் உள்ள கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கங்களை வழங்கினர். இதில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றும் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்க நிர்வாகிகள் போதை பொருட்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினர். பலர் கலந்து கொண்டனர்.