தொலைநிலைக்கல்வி இயக்க மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்க மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-05-02 20:54 GMT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்க மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொலைநிலைக்கல்வி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வியில் பட்டம், முதுநிலை பட்டம், பட்டய, முதுநிலை பட்டய படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் தொடங்க உள்ளன. இது குறித்து பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் கூடுதல் தேர்வாணையர் சலீமா ராபியத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான நவம்பர்-2022 மற்றும் ஏப்ரல்-2023 தேர்வுகள் தொடங்க உள்ளன. அதாவது, பருவ முறை மற்றும் அல்பருவ முறை தேர்வுகள் அனைத்தும் வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் www.mkudde.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. தாமத கட்டணமில்லாமல் நாளை (வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். ரூ.500 தாமத கட்டணத்துடன் வருகிற 12-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி வாய்ப்பு

தேர்வுகள் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் தொடங்குகிறது. அதேபோல, தேர்வுக்கு முன்னதாக அகமதிப்பீட்டு பணிகளை (அசைன்மெண்ட்) ஒப்படைக்க வேண்டும். இது குறித்த தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களின் திட்டப்படிகளை வருகிற 30-ந் தேதிக்குள் கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தபாலில் அனுப்புபவர்கள், கூடுதல் தேர்வாணையர், தொலைநிலைக்கல்வி இயக்ககம், காமராஜர் பல்கலைக்கழகம், நாகமலை புதுக்கோட்டை, மதுரை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 10 இலக்க பதிவெண்கள் மற்றும் அதற்கு முந்தைய பதிவெண்கள் கொண்ட பழைய மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத இதுவே கடைசி வாய்ப்பாகும். அதாவது 2013 மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் சேர்க்கை பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்