பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: மாமியாரை தாக்கியவர் கைது
பணம் கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மனைவி ராணி (வயது 47). இவருக்கும், இவரது மருமகன் வாரியங்காவல் வடக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தனது மாமியார் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ராணி அளித்த புகாரின் பேரில் வேல்முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.