பணத்தை திருப்பி தராததால் தகராறு; தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு
பணத்தை திருப்பி தராததால் தகராறில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சின்னதாராபுரம் அருகே தும்பிவாடி சிவன் காலனியை சேர்ந்தவர் மருதை வீரன். (வயது 31). இவர் பஸ் பாடி கம்பெனியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இதேபோல் தும்பிவாடி 5 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 48). இவர் கரூர் பஸ் பாடி கம்பெனியில் காண்ட்ராக்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தியிடம் மருதைவீரன் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
அப்போது முன்பணமாக ரூ.30 ஆயிரத்தை வாங்கியுள்ளார். அதனை திருப்பி செலுத்தாமல் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு வேறு ஒரு பக்கம் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி புஷ்பலதா (45), அவரது மகன் நவீன் குமார் (26) மற்றும் புஷ்பலதாவின் தம்பி ரவிக்குமார் ஆகியோர் சேர்ந்து மருதைவீரனிடம் தகாதவார்த்தையாலும், சாதிப் பெயரைச் சொல்லியும் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருதைவீரன் கொடுத்த புகாரின்பேரில், கிருஷ்ணமூர்த்தி உள்பட 4 பேர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.