ஜமீன்ஊத்துக்குளியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு; வாலிபர் கைது

ஜமீன்ஊத்துக்குளியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு; வாலிபர் கைது

Update: 2023-06-15 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ஒருவர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேற்பார்வையாளரான நவீன்குமாரிடம், அவர் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கு ஏ.டி.எம். கார்டை கொடுத்து எந்திரத்தில் போடுமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர் பெட்ரோல் நிரப்புவதற்கு முன் போட முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றவே அந்த நபர் நவீன்குமாரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அகிலாண்டபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்பதும், அவர் போதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்