ஆட்டோ நிறுத்தத்தில் தகராறு-2 பேர் கைது

பரப்பாடியில் ஆட்டோ நிறுத்தத்தில் தகராறு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-10-25 21:09 GMT

இட்டமொழி:

பரப்பாடியில் ஆட்டோ நிறுத்த சங்க தலைவராக இருப்பவர் ஜஸ்டின் பிரபாகரன் (வயது 47), செயலாளராக இருப்பவர் யெகோவா அருமைதுரை (வயது 35).ஆட்டோ ஸ்டாண்ட் சங்க பணம் 2 பேர் பெயரிலும் வங்கியில் போடப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பணத்தை எடுப்பது தொடர்பாக தலைவருக்கும், செயலாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து ஜஸ்டின் பிரபாகரனுக்கும், யெகோவா அருமைதுரைக்கும் இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது ஆத்திரமடைந்த ஜஸ்டின் பிரபாகரன் அதே ஸ்டாண்டில் உள்ள சீயோன்மலையை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 41) என்பவருடன் சேர்ந்து யெகோவா அருமைதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த யெகோவா அருமைதுரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜஸ்டின் பிரபாகரனையும், செல்லபாண்டியையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்