அனுமதி பெறாமல் கழிவுநீரை அகற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்

அனுமதி பெறாமல் கழிவுநீரை அகற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கூறினார்.

Update: 2023-06-16 20:37 GMT

சிவகாசி, 

அனுமதி பெறாமல் கழிவுநீரை அகற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கூறினார்.

சிறப்புக்குழு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படுவர்.

உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனே உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். உரிமம் பெறாத வாகனங்களை ஆய்வு செய்ய, சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விதி மீறல் நடவடிக்கை

அனுமதியின்றி கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்றுவோருக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம், 2-வது முறை ரூ.50 ஆயிரம், தொடர்ந்து விதிமீறல் இருந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆதலால் பணியாளர்களை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி அவர்கள் இறக்க நேரிட்டால் ரூ.15 லட்சம் வீட்டு உரிமையாளர், வாகன உரிமையாளர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்