மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை

ராணப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தி 3 கல்லூரிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-11 18:20 GMT

ராணப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தி 3 கல்லூரிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அழகுசாதன பொருட்கள்

ராணப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன்பாட்டு பொருட்களை கல்லூரிகளில் காட்சிபடுத்தி மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்ய கல்லூரி சந்தைகள் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், விளாப்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் வருகிற 14, 15-ந் தேதிகளில் 2 நாட்கள், வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 16, 17-ந் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயன்பெறலாம்

இதில் பயன்பெற விரும்பும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தங்களது உற்பத்தி பொருட்கள் பற்றிய விவரங்களை மகளிர் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளவும். பொது மக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்