சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நெல்லை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-08-21 18:49 GMT

நெல்லை மாநகராட்சி பகுதியில் தினந்தோறும் 100 டன்னுக்கும் மேலாக மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்படும்போது புகைமூட்டம் ஏற்பட்டு சங்கரன்கோவில் சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு சிரமம் ஏற்படும். மேலும் பொதுமக்களும் பாதிக்கப்படுவர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த குப்பைக்கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 5 நாட்களாக போராடி தீயை அணைத்தனர். அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதுதொடர்பாக விசாரிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். தீவிபத்து நடந்த சில நாட்களில் அந்த பகுதி மேஸ்திரி பெருமாள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. தற்போது பேட்டை பகுதி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்