புகார் மனுதாரர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
புகார் மனுதாரர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பிரபு. இவர் பணியின்போது அஜாக்கிரதையாகவும், மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் மனுதாரர்களிடம் கையூட்டு (லஞ்சம்) பெறுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவிட்டுள்ளார்.