இந்தியாவில் மனைவியிடம் உள்ள குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய கணவனின் மனு தள்ளுபடி

அமெரிக்காவில் உள்ள கணவனின் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2023-09-02 11:29 GMT

சென்னை,

இந்தியாவில் மனைவியிடம் உள்ள குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி அமெரிக்காவில் உள்ள கணவன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அத்துடன், தான் பெற்ற குழந்தையை கட்டாயப்படுத்தி வாங்கி பத்திரப்பதிவு செய்ததாக குழந்தைகளின் தாய் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அமெரிக்காவில் உள்ள கணவனின் மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன், தாயின் அரவணைப்பில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை, தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்பினால், குழந்தைகளின் வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்