400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருக்கோவிலூர் அருகே 400 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே அடுக்கம் கிராம பகுதியில் அரகண்டநல்லூர் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் அசோக் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.