பனிப்பொழிவால் நெற்பயிர்களில் நோய் தாக்குதல்
பனிப்பொழிவால் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெமிலி
பனிப்பொழிவால் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் நெசவு மற்றும் விவசாய தொழில். இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது நெற்பயிர் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக நெற்பயிர்கள் போதிய வளர்ச்சி இன்றி நோய் தாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, வேளாண் துறை அலுவலர்கள் நெற்பயிரில் ஏற்பட்டுள்ள நோயை கண்டறிந்து, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.