காஞ்சீபுரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-06-23 08:24 GMT

நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 24 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள புதுப்பிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டரங்கை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கின் கல்வெட்டை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சீபுரம் ஒன்றிய குழுத் தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள்

செங்கல்பட்டு மாவட்டம் பி.வி.களத்தூர் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அவருடன் மாநில நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் செல்வகுமார், உதவி கோட்ட பொறியாளர் ஆண்ட்ரூஸ், உதவிப்பொறியாளர் சண்முகப்பிரியன், சாலை ஆய்வாளர் செந்தில்குமார், ஆலப்பாக்கம் வனக்குழு தலைவர் வி.ஜி.திருமலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்