திருநங்கைகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருநங்கைகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-05 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்றைய அரசியலும் திருநங்கைகளுக்கான சமூக பிரச்சினைகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், தொடக்க உரையாற்றினார். வக்கீல் ஆனந்தன், பேராசிரியர் மதுவந்தி, சுந்தரவள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், பெண்கள் மட்டுமல்ல, திருநங்கைகளும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சமூகத்தில் பல்வேறு நிலைகளில் திருநங்கைகள் பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர். திருநங்கை என்றாலே சமூகத்தில் ஒருவிதமான பார்வைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு என்பது குறித்து ஆராய்ந்து கலந்துரையாடி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலேயே இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் தாங்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு வாய்ப்பாக இந்த கலந்துரையாடல் அவர்களுக்கு பயன்படும் என்றார்.

இதில் விழுப்புரம், திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள், திருநம்பிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்